அன்புள்ள தமிழ்க் குடும்பத்தாருக்கு வணக்கம்!...
தமிழரின் மரபுச் செல்வங்களைப் போற்றிக் காப்பதில் நம் பங்கு....
ரோஜா முத்தையா ஆய்வு ​நூலகத்தைப் பற்றி நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கும். கோட்டையூரில் தம் செல்வம் முழுவதையும் செலவிட்டுத் தமிழ்ப் பத்திரிகைகளையும் பின்னாளில் வேறு பல ஆவணங்களையும் சேகரித்து வைத்த முத்தையா செட்டியாரின் காலத்திற்குப் பின் அந்நூலகம் சிகாக்கோ பல்கலைக்கழகத்தால் வாங்கப்பட்டு செ​ன்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கே, தனி அறநிலையினால் நிர்வகிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்குப் பின், பத்திரிகைகளின் களஞ்சியமாக மட்டுமின்றி, தமிழ் இலக்கியம், இசை, பண்பாடு, சமூகம் சார்ந்த தொன்மையான ஏடுகள், நூல்கள், இசைத் தட்டுகள் முதலியவற்றைச் சேகரித்துப் போற்றிப் பாதுகாக்கும் கருவூலமாகவும் அது விரிவுபடுத்தப்பட்டது. தொன்மையான ஏடுகளும் நூல்களும் காலத்தால் அழியாமலிருக்கும் வகையில் அவற்றை மின்னிலக்கப்படுத்த அதி நவீன சாதனங்கள் வாங்கப்பட்டன. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யருக்குப் பின் தமிழ் ஆவணங்களை வருங்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் பெரும் பணி இங்கு மட்டுமே செவ்வனே திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது.
அண்மையில் சிகாக்கோ பல்கலைக்கழகத்தின் உதவி குறைந்துகொண்டே வந்து, அறநிலை தன் காலிலேயே நிற்கும் நிலையை அடைந்திருக்கிறது. இத்தன்னிகரில்லா நூலகத்தின் அரும் பணி தொடர்வதற்கு நிதி தேவை. சிங்கப்பூர்த் தமிழர் தங்களால் இயன்ற நிதியை அளித்தால் நூலகத்திற்குப் பேருதவியாக இருக்கும். நன்கொடையை நூலகத்திற்கு நேரடியாக அனுப்பலாம்.
கணிசமான தொகை அளிக்க விரும்புவோர், நூலகத்தின் திறமையான நிர்வாகத்தைப் பற்றியும் அதன் வருங்காலத் திட்டங்களைப் பற்றியும் மேல் விவரங்கள் அறிய விரும்பினால், சிங்கப்பூருக்கு வருகை தரவிருக்கும் நூலகத்தின் அறங்காவலர்களில் ஒருவரான எஸ் முத்தையா அவர்களை ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 4 மாலை 4 மணிக்கு சையது அல்வி ரோட்டில் முகம்மது முஸ்தாஃபாவுக்கு எதிரில் உள்ள ஆனந்த பவனின் மாடியில் சந்திக்கலாம். திரு முத்தையா பல சிறந்த புத்தகங்களின் ஆசிரியர்; ஹிந்து நாளிதழில் மிகப் பரவலாகப் படிக்கப்படும் வாராந்திரக் கட்டுரை எழுதுபவர். ச​ந்திக்க ஆர்வமுள்ளவர்கள், arun_senkuttuvan@yahoo.com என்னும் முகவரிக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) மாலைக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
கிள்ளான் மாவட்ட தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின்
17ஆம் ஆண்டு விழா - சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி
கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கத்தின் 17ஆம் ஆண்டு விழ வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, காலை 8 மணி தொடங்கி மாலை 06.30 மணி வரை நடைபெறவுள்ளது. மனிதநேய மாமணி ரத்னவள்ளி விஜயராஜ் அம்மையார் தலைமை வகிக்க, நாட்டின் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்
மேலும் இந்நிகழ்வை முன்னிட்டு, இலக்கிய சோலை 12ன் கீழ் "இடுக்கண் வருங்கால் நகுக!" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதும் போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் தங்களது சொந்த படைப்புகளை வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் படைப்புகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும் என்று அவ்வியக்கத்தின் செயலாளர் எஸ். எம். ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
மேலும் உங்கள் படைப்புகள் சிறுகதையாக இருந்தால் 6 பக்கங்களுக்கு மிகாமலும், கணிணி அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும், புதுக்கவிதைகளாக இருந்தால் 16 வரிகளுக்கு குறையாமலும், 24 வரிகளுக்கு மிகாமலும் இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், வாசகர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி,
President, Persatuan Pembaca Dan Penulis Tamil Daerah Klang, No. 48,Lebuh Siput, Palm Grove 41200 Klang, Selangor.
இந்நிகழ்ச்சி குறித்து மேலும் விவரங்கள் அறிய கீழ் காணும் கைப்பேசி எங்களை தொடர்பு கொள்ளவும்.
பாலகோபாலன் நம்பியார் - இயக்கத் தலைவர் - 017 3356952, 019 2792719