நோக்கம்

 1. தமிழ் இலக்கியத்தைப் பரப்புதல்

 2. தமிழர்களின் சமூகவியல் ஆராய்ச்சிகள் செய்தல்

 3. தமிழ் அறிஞர்கள் மேல் ஆராய்ச்சி செய்ய உதவுதல்

 4. மேல்நிலை தமிழ்க்கல்வி பயில்பவர்களுக்கு மான்யம் வழங்குதல்

 5. தமிழ்மொழி பரப்புதலில், புழங்குதலில், மேம்படுத்தலில், ஊக்குவித்தலில் பங்கெடுத்தல்

 6. மலேசியா, சிங்கப்பூர், தமிழர்களின் வாழ்வை ஆய்வு செய்தல் - இப்பணியை யாராவது தமிழ்த்தொண்டு என்ற நோக்கில் செய்ய முன் வந்தால், அவர்களுக்கு எமது அறக்கட்டளை உதவிகள் செய்யும்

 7. சிங்கப்பூர், மலேசியா தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றியும், தமிழ் அறிஞர்களின் நூல்கள் குறித்தும் ஆய்வு செய்யும் நிறைஞர்,ஆய்வியல் முனைவர் மாணவருக்கு ஊக்கத்தொகை வழங்குதல்.

 8. சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களுக்கு தமிழ் நாட்டில் அங்கீகாரம் பெறவேண்டி சிங்கப்பூர், மலேசியா சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தின் மூலம் விருது வழங்கிட ஓர் அறக்கட்டளை நிறுவுதல்

  .
 9. தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் துவக்கப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் தொடர்பான மலேசியா அமரர் திரு.ஆதி குமணன் நூலகத்திற்கு தேவைப்படும் நூல்களை சேகரித்து அனுப்புதல் (இதுவரை 1930-ம் வருடம் முதல் சிங்கப்பூர், மலேசியா வில் வெளியான சுமார் 3000 நூல்களைத் திரட்டி வழங்கியுள்ளது எமது அறக்கட்டளை).

 10. இலங்கை யாழ்ப்பாண தமிழ் நூலகத்திற்கு நூல் திரட்டி அனுப்புவதால் நூல் யாராவது அன்பளிப்பு செய்ய விரும்பினால் எமது அலுவலகத்திற்கு அனுப்பும்படி வேண்டுகிறோம்